இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 29-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,Infinix Hot 9 Series to launch in India on May 29 and More Details

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 29-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,Infinix Hot 9 Series to launch in India on May 29 and More Details

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 29-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.மேலும் ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

1520 x 720 பிக்சல்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவை அடிப்படையாக கொண்டு வெளிவரும், மேலும் 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 10

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஏ25 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வாட்ஸ்அப் செயலியில் பயனுள்ள வசதி அறிமுகம்.! என்ன தெரியுமா?


எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏஐ லென்ஸ் என மொத்தம்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனில் 16எம்பி பிரைமரி லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா,
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


5000எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.